வேர்ச்சொல்: கல் (பொருள்: கூட்டம்)
கல் – கல – கலத்தல் = சேர்த்தல் (‘பாலொடு தேன் கலந்து அற்றே’, குறள்.1121; ‘கலப்பேன்கொல்’, குறள்.1267); கல் – கல – கலவி = புணர்ச்சி, இணைதல் (‘கலவியும் புலவியும்’, சிலம்பு.புகார்.அந்தி.32. ஒ.நோ.: புல் – புல்லுதல் = பொருந்துதல்; புல் – புள் – புண் – புணர் – புணர்ச்சி = இணைதல்); கல் – கலவு – கலவு + அம் – கலவம் = இணைந்த சிறகுகளைக் கொண்ட மயில் தோகை (ஒ.நோ.: தொகு – தோகை) (‘கலவ மஞ்ஞை’, மலை.235); கல் – கலவு – கலவு + அம் – கலவம் – கலாவம் – கலாபம் = மயில் தோகை (‘மணிமயில் கலாபம்’, சிறுபாண்.264); கலவம் – கலாவம் – கலாபம் – kalāpa(Skt.) = a peacock's tail; கல் – கல் + து – கற்று – கற்றை = திரள் (‘கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பு’, பெரும்பாண்.150); கல் – கலம் = உடலினையும் தலையினையும் இணைக்கும் கழுத்தாகிய உறுப்பு. (மொழிநூல், ப.112); கல் – கலவு = மூட்டு (‘கலவு’, அகம்.3:9); கல் – கய் – கயில் = இணைப்புப் பகுதி (‘கட்டிய கயில் அணி’, பரி.12:18); கல் – கள் – களம் = உடலினையும் தலையினையும் இணைக்கும் கழுத்தாகிய உறுப்பு (‘பாடுகள மகளிர்’, சிலம்பு.புகார்க்.கடலாடு.157); கல் – கள் – களம் – gal – gala (neck)-Skt.; கல் – கள் – களம் – gal – gr – griva (neck,), grivakhanta (Skt., bell hanging down from the neck of the horse, Monier). களம் – gr: ளகர – ரகர மாற்றம். ஒ.நோ.: மிளகு – marica (சமற்.). கிரீவம் kirīvam , n. < grīvā. Neck; கழுத்து. (திவா.) – செ.ப.க. அகராதி.
Grīvā (Neck)
To break the monotony of the long tapering tower, a small portion at the top beneath the śikhara, looks like the neck of a human being. It is called grīvā which forms the fourth part of the Aṅga of the temple.
(https://ignca.gov.in/brhadisvaratemple/viman/architecture/Components/pages/04_Griva.htm)
கல் – கள் – களம் – collum (Lat.) "the neck," from PIE *kwol-o- "neck" (source also of Old Norse and Middle Dutch hals "neck"), literally "that on which the head turns," from root *kwel- (1) "revolve, move round."
குறிப்பு:
‘கல்’ என்னும் தமிழ்வேரில் பிறந்த ‘கல் – கள் - களம்’ என்னும் சொல், தலையினையும் உடம்பினையும் இணைக்கும் கழுத்திற்குப் பெயரானது. இக் ‘களம்’, அகர-ஒகரத் திரிபில் இலத்தீனில் ‘collum’ என்றானது. கூட்டப்பொருளில் பிறந்த ‘collum’ சொல்லின் பொருளினைச் செலவுப்பொருளில் இணைத்து literally "that on which the head turns," from root *kwel- (1) "revolve, move round." என இணையவழி வேர்ச்சொல் அகராதி பொருளுரைத்தது பொருந்தாது.
‘கல்’ என்னும் வேர், கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை எனப் ஆறு பொருள்களில் தமிழில் சொற்களைத் தோற்றுவித்த வரலாற்றினை ‘உலகின் பரவிய தமிழின் வேர் – கல்’ நூல் விரிவாக விளக்கியுள்ளது. கூட்டப்பொருளின் ‘கல்’, கழுத்தினைக் குறிக்கும் ‘களம்-collum’ சொல்லினைத் தோற்றுவித்தது. இயக்கப் பொருளின் ‘கல்’, ‘kwel’ என ஓர் இந்தோ-ஐரோப்பிய வேராகிச் செலவுப்பொருள் வேராக மாறியது. இவ் இரண்டினையும் இங்கு இணைத்ததன் பொருத்தமின்மையைக் ‘கால்’(செலவு) வரலாற்றில் காணலாம். ‘collum’ என்னும் இலத்தீன் சொல்லுடன் உறவுடைய ஆங்கிலச் சொல் ‘collar’. இதனைக் ‘களம்’(கூட்டம்) சொல் வரலாற்றில் காண்க.
களம் – collum: அகர-ஒகரத் திரிபு
எ.கா.: கள்ளர் – Collery
COLLERY, n.p. The name given to a non-Aryan race inhabiting part of the country east of Madura. Tam. kallar, 'thieves.' They are called in Nelson's Madura, [Pt. ii. 44 seqq.] Kallans; Kallan being the singular, Kallar plural.
Hobson-Jobson, p.236
(‘கள்ளர்’ என்னும் தமிழ்க்குமுகம் திருடும் தொழில் கொண்டதன்று. ‘வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவின்படி ஆநிரை கவர்தல் தொழில் செய்த மறவர் குமுகமாகும். இதனை அறியாமல் மேலையர் ‘கள்ளர்’ சொல்லிற்குத் தவறான பொருள் எழுதியுள்ளனர்.)
கல் – கள் – களு – களு + து – களுத்து – கழுத்து = உடலினையும் தலையினையும் இணைக்கும் உறுப்பு (‘கழுத்து’, கலித்.109:15); கல் – கள் – கண் – கண் + அம் – கணம் = கழுத்து (‘கருநனைக் காயா கணமயில் அவிழ’, (கரிய அரும்புகளையுடைய காயாக்கள் மயில்களின் கழுத்துகளைப் போலப் பூப்ப), சிறுபாண்.165); கல் – கள் – கண் – கணம் = கூட்டம் (‘மான்கணம்’, புறம்.90:3); கல் – கள் – கள் + து – கடு – கடுப்ப = பொருந்துதல் பொருள்தரும் உவம உருபு, பொருந்த (‘உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்’, புறம்.90:1); கல் – கள் – கள்+சி – கட்சி = பறவைகள் தங்கியிருக்கும் கூடு (‘குறும்பூழ் கட்சிச் சேக்கும்’, பெரும்பாண்.205), ஆநிரைகள் கட்டிவைக்கப்படும் இடம் (‘கட்சிக் காணா கடமா நல்லேறு’, புறம்.202:2; ‘விரவார் மணிநிரைக் கட்சியுள் காரி கலுழ்ம்’, புறப்.வெண்.மா.2); கல் – கள் – கள்+து – கட்டு – கட்டுதல் = பிணைத்தல் (‘பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்’, குறுந்.21:2); கல் – கள் – கள் + து – கட்டு – கட்டி = பொருள் திரட்சி (‘தேம்பூங் கட்டி’, குறுந்.196); கல் – கள் – கள் + து – கண்டு = திரண்டது, கற்கண்டு (‘வாயூறு கண்டு’, தாயு.சித்தர்.7:1); திரண்ட நூற்கண்டு; கல் – கள் – கள் + து – கண்டு – கண்டம் (ஒ.நோ.: துண்டு – துண்டம்) = திரண்ட வடிவினது, பிரிந்தது (‘நெடுங்காழ்க் கண்டம்’, முல்லைப்.44); கல் – கள் – கள் + து – கண்டு – கண்டம் – காண்டம் = நூலின் திரண்ட தனிப் பகுதி (‘புகார்க்காண்டம்’, ‘பாலகாண்டம்’); கல் – கள் – களம் = வயற்களம் (‘பெருங்களம் தொகுத்த உழவர்’, அகம்.30:8); போர்க்களம் (‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்’, புறம்.87:1); ஆடுகளம் (‘யானுமோர் ஆடுகள மகளே’, குறுந்.31:4); கல் – கள் – கண் = நிலைத்திணைகளின் இணைப்புப் பகுதி (‘கண் இடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பு’, மலை.6); கல் – கள் – கண் -கணு = இணைப்புப் பகுதி.
ஒ.நோ.:
பொருத்து
புல் – புல்ல = பொருந்துதல் பொருள்தரும் உவம உருபு; புல் – பொல் – பொர் – பொரு – பொருவு – பொருவுதல் = பொருந்துதல்; புல் – பொல் – பொர் – பொரு – பொருவு – பொருவ = பொருந்துதல் பொருள்தரும் உவம உருபு; புல் – பொல் – பொர் – பொரு – பொருகளம் = போர் மறவர்கள் கூடிப் பொருகின்ற போர்க்களம்; புல் – பொல் – பொர் – பொரு – போர் = மறவர் பலர் கூடிச் செய்யும் சமர் (ஒ.நோ.: கும் (கூட்டக்கருத்து வேர்) – சும் – சம் – சமம், ‘ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி’, புறம்.312:5; ‘செல்சமம் முருக்கி’, முருகு.99; ‘களிறுடை அருஞ்சமம்’, அகம்.46:12); புல் – பொல் – பொர் – பொரு – பொருத்து = இணைப்புப் பகுதி; பொருத்து² poruttu , n. < பொருத்து-. 1. Joining, junction, confluence; இணைப்பு. (W.) 2. Joint, suture of bones in the body; உடல் மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298). 3. Joining, in carpentry; மரத்தினிணைப்பு. 4. Knot of a plant; மரக்கணு. 5. Uniting; ஒன்று சேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கம்பரா. கும்பகர்ண. 157). 6. Agreement, engagement; ஒப்பந்தம். (W.) 7. Temple of the head; கன்னப் பொட்டு. Loc.
-செ.ப.க. அகராதி
முளி
முல் – முய் – மொய் – மொய்த்தல் = நெருங்குதல், சேர்தல்; முல் – முள் – முள்+து – முட்டு – முட்டுதல் = ஒரு பொருளுடன் சேர்தல் (‘முட்டுவேன்கொல்’, குறுந்.28:1); முல் – முள் – முள்+து – முட்டு – முட்டுக்கொடுத்தல் = தாங்கிப்பிடித்தல்; முல் – முள் – முள்+து – முட்டு – முட்டு = கை, கால் போன்ற உறுப்புகளின் கணுப்பகுதி; முல் – முள் – முள்+து – முட்டு – முட்டு – முட்டு + இ – முட்டி = கை, கால் போன்ற உறுப்புகளின் கணுப்பகுதி; முல் – முள் – மூள்தல் – மூளுதல் = நெருப்புப் பற்றுதல்; முல் – முள் – முளி = உடல்மூட்டு (‘திகழ் முச்சாண் என்பு முளி அற’, தத்துவப்.113); மரக்கணு (யாழ்.அக.); கணுக்கால் (W.).
முழி
முல் – முள் – முளி – முழி = எலும்புப்பூட்டு, மூட்டு.
முட்டு
முல் – முள் – முள்+து – முட்டு = முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து.
மூட்டு
முல் – முள் – மூள் – மூள்+து – மூட்டு = இணைப்புப் பகுதி (‘கவசத்தையும் மூட்டறுத்தான்’, கம்ப. ஆரண். சடாயு. 27:4).